காரைதீவில் கடல் கொந்தளிப்பு:மீனவர் தொழில் பாதிப்பு கடல்நீர் பெருக்கெடுப்பு : தோணிகள் கரையில்: அதற்குள் களிப்பு

(காரைதீவு நிருபர் சகா)

காரைதீவில் திடிரென நேற்றுமுன்தினம்(10)மாலை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் கடல்நீர் பெருக்கெடுத்து கரையிலிருந்த தோணிகளை பந்தாடியது. மீனவர்கள் உசாராக செயற்பட்டு தோணிகளை நீண்டதூரம் கரைக்கு கொண்டுவந்து வைத்துள்ளனர்.

கடல்நீரும் பெருக்கெடுத்ததால் கரையிலிருந்த பள்ளத்திற்குள் நீர்நிறைந்தது. அதற்குள் தோணிகளை ஓட்டி சிறுவர்கள் மக்கள் குதூகலித்தனர்.

இதேவேளை கடற்கொந்தளிப்பால் மீனவர்கள் கடலுக்குச்செல்லவில்லை. ஆழ்கடல் மீன்பிடியோ கரைவலை மீன்பிடியோ எதுவுமே இடம்பெறவில்லை. அதனால் நேற்று (11) மீனுக்கு தட்டுப்பாடு நிலவியது.