கிழக்கு பல்கலைக்கழகத்தின் 10வது உபவேந்தராக பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவு

(எப்.முபாரக்)

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 10வது உபவேந்தராக பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

உபவேந்தருக்கான தேர்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தெரிவுக்குழுவின் பிரகாரமும், கிழக்கு பல்கலைக்கழக பேரவையில் பிரகாரமும் முதல்நிலையில் தெரிவு செய்யப்பட்டு மானியங்கள் ஆணைக் குழுவின் சிபார்சின் பிரகாரம் ஜனாதிபதியினால் பேராசிரியர் கனகசிங்கம் இப்பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டார்.

பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் முகாமைத்துவ துறையில் முதலாவது பேராசிரியரும் திருகோணமலை வளாக முதல்வராக ஆறு வருடங்கள் பதவி வகித்தவருமாவார்.

இவருடைய காலப்பகுதியிலேயே திருகோணமலை வளாகம் பாரிய வளர்ச்சி அடைந்தது. கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இவர் பீடாதிபதியாக கடமையாற்றிய காலப்பகுதியில் இவர் மட்டக்களப்பு சமூகவியலாளர் கல்வியாளர்கள் மற்றும் வர்த்தக அங்கத்தவர் உடன் இணைந்து செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருடைய சேவையின் ஊடாக கிழக்கு பல்கலைக்கழகம் பாரிய கல்வி மற்றும் கல்வி சாரா முன்னேற்றத்துடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊடாக சமூகத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கும் பங்களிப்பு செய்ய ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதும் கட்றோர் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.