அரச சேவையில் வெற்றிடங்கள்?

அரச சேவையில் ஏற்படும் வெற்றிடங்கள் பல்வேறு அரச நிறுவனங்களில் உள்ள அதிகப்படியான பணியாளர்களை கொண்டு நிரப்பப்படும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

எனவே, அரசு நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறையோ, சேவையை வழங்குவதில் குறைபாடுகளோ ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அரச துறைக்கான ஆட்சேர்ப்புகளை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்த நிலையில் இந்த அறிவிப்பை அமைச்சா வெளியிட்டுள்ளார்.