ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவர் மழ்ஹர்தீன் அவர்களது வாழ்த்துச் செய்தியும் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமாறு கோரிக்கையும்.
ரணில் விக்கிரமசிங்க தனிநபராக சபைக்கு வந்து தற்போது பிரதமராகியுள்ளார். இது ரணில் எனும் தனிமனிதனின் திறமைக்கு கிடைத்த வெற்றியாகும்.
எதிர்வரும் தினங்களில், அவர் திறமையால் ஆட்சியமைத்து, கபினட் அமைத்தால், அவருக்கு 113 கிடைக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. அப்போது அவர் தனிநபர் அல்ல. ஆகவே அவரால் முடியுமானாலா ஆட்சி செய்து காட்டட்டும்.
அவருக்கு எமது ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் இலங்கையில் புதிய பிரதமர் அனைத்து பொருட்களின் விலைகளையும் குறைத்து மக்களை நிம்மதியாக வாழ ஏற்பாடுகளை செய்யுமாறும் இச் சந்தர்ப்பத்தில் ஐக்கிய காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொள்கின்றது. அவ்வாறு செய்து காட்டினால், அவரை இலங்கை மக்கள் தலைக்கு மேல் வைத்து மதிப்பார்கள் எனவும் அவரது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.