அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டதன் பின்னர் முதன்முறையாக மொட்டுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களைச்சந்திப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என அனைத்து மொட்டுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பல எம்.பி.க்கள் கலந்து கொள்வதாக தெரிவித்த போதிலும், சில எம்.பி.க்கள் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
ஆனால், நடைபெறும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.