ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு.

மஹிந்த ராஜபக்சவின் வன்முறை மற்றும் அடக்குமுறை காரணமாக நாடு சீரழிந்தது எனவும், இத்தருணத்தில் ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அண்மைய நாட்களில் அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நிலைமைக்கு பொலிஸ் மா அதிபரும் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று (11) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து ஊடகங்ஙளுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.