திருகோணமலை கடற்படை முகாமிற்கு மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர்.?

திருகோணமலை கடற்படை முகாமிற்கு மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்தவர்கள் வந்துள்ளதாக வெளியான செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இன்று (10) காலை கடற்படைத் தளத்தை வந்தடைந்ததாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இதையடுத்து போராட்டங்கள் தொடங்கியுள்ளன. மகிந்த ராஜபக்சவையும் அவரது பாரியாரையும் கடற்படை முகாமில் இருந்து வெளியேற்றுமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.