கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட சிறுவர் விளையாட்டு போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிப்பளை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை முதலிடத்தினை பெற்றுக் கொண்டுள்ளது.
குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 3இனை சேர்ந்த கலப்பு அணியே முதலிடத்தினைப் பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையினால் முதன் முறையாக இப்போடியில் இச்சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.