கல்லடியில் 350க்கு மேற்பட்டோர் பங்குகொண்ட யோகா

0-0x0-0-0#

சர்வதேச யோகா தினத்தினை சிறப்பித்து மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையம் இன்று (21) சனிக்கிழமை சிவானந்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் சிறப்பு யோகா அளிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இராமகிருஷ்ணமிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தஜி, உதவிப் பொது முகாமையாளர் சுவாமி உமாதீஷானந்தஜி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதிமாநகர முதல்வர் வைரமுத்து தினேஷ்குமார், ஊவா வெல்லஸ பல்கலைக் கழக நூலகர் கலாநிதி த. பிரதீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அளிக்கை செய்த மாணவர்கள் மற்றும் அதிகள் நினைவுப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு யோகாவில் சாதனை படைத்த மாணவர்கள் பதக்கம் அணிவிக்கப்பட்டு,சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இவ்யோகாசன நிகழ்வில் மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதனை எஸ். சிறிதரன், அழகுதுரை ஜெயகரன் ஆகியோர் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0-0x0-0-0#
0-0x0-0-0#
0-0x0-0-0#
0-0x0-0-0#