நாட்டின் நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கான தகைமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் தாமும் அவருக்கு ஆதரவு வழங்குதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிபந்தனைகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் பங்கேற்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய தங்களது கோரிக்கைகளுக்கான இணக்கத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுத்து மூலம் வழங்கினால் அமைச்சரவையில் பங்கேற்கலாம் என அவர் மேலும் கூறியுள்ளார்.