தர்மத்தை கடைபிடிப்பதன் மூலம் பாதுகாப்பைப் பெறுவோம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் வெசாக் தின செய்தி

உலக வாழ் பௌத்தர்களின் சிறப்புமிக்க மத தினமான வெசாக் போயா தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

பிரபஞ்சத்தில் காணப்படுகின்ற நிலையான சத்தியத்தை ஞானத்தினால் கண்ட புத்தபிரான் உபதேசித்த தம்மம், அவருடைய தம்மம் நித்தியமானது என்பதை நாளுக்கு நாள் நிரூபிக்கப்படுகின்றது.

அவர் உபதேசித்த ஆயிரக்கணக்கான தர்மகாண்டங்களில் உள்ள அனைத்துப் பகுதிகளும் முன் வைப்பது பூரண உண்மையேயாகும்.

இலட்சம் கல்பங்களுக்கு முன் தீபங்கர புத்தரின் காலத்தில் வந்த ஒரு வெசாக் நாளில் தான் ஞானம் பெறுவேன் என்று உறுதியான விளக்கங்களைப் பெற்று வெசாக் பௌர்ணமி நாளில் பிறந்த போதி மாதவன்,வெசாக் தினத்தில் புத்தபெருமான் ஞானமடைந்தார். ஞானம் பெற்று 45 வருடங்கள் உலக மக்களை வாழ்வின் துயரங்களில் இருந்து விடுவிப்பதற்காக அபரிமிதமாகப் பாடுபட்டு, கடைசியில் சகல சம்பிரதாயங்களின் நிலையற்ற தன்மையையும் உணர்ந்து, வெசாக் பௌர்ணமி நாளிலேயே உலகை விட்டுப் பிரிந்தார்.

எனவே, இந்த வெசாக் போயா தினம் சமய ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் மிகவும் முக்கியமானது.

பௌத்தர்கள் பழங்காலத்திலிருந்தே வெசாக் போயா தினத்தில் ஆமிச மற்றும் கொள்கை பூஜைகளை கடைப்பிடித்து வருவதுடன் மத நடவடிக்கைகளில் நாட்டத்தைக் கொண்டுள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.
அதிகாரப் பேராசை, சந்தர்ப்பவாதம், சுயநலம் ஆகியவற்றுக்குப் பதிலாக பிரர்நலத்தின் மூலம் உலகை மகிமைப்படுத்த வேண்டும் என்ற செய்தியைப் போதித்து நடைமுறையில் உலகுக்கும் வெளிப்படுத்தினார்.

இனம், மதம், சாதி என அனைத்துப் பிரிவினைகளும் அர்த்தமற்றவை என்று போதித்த புத்த பெருமான், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என வாழும் முறையை வைத்தே அளக்க முடியும் என்றும் போதித்தார்.

அவர் அங்கீகரித்த தனித்துவமான போதனைகளை நவீன வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முடியும் என்பதும் உண்மை.

புத்திசாலியானொருவர், தனக்காகவோ பிறருக்காகவோ பாவம் செய்யாமலிருப்பாரோ, தவறான வழியில் மகனையோ செல்வத்தையோ நாட்டையோ நாடாமலிருப்பானோ அல்லது அநீதியால் தன் முன்னேற்றத்தை எதிர்பார்க்காமலிருப்பானோ அவன் உயர்ந்தவன் என்று பௌத்தம் கூறுகிறது.

‘மார்க்கத்தை கடைபிடிப்பவன் மார்க்கத்தினாலே காக்கப்படுகிறான்’ என்ற புத்தபெருமானின் வார்த்தைகளுக்கு ஏற்ப, இந்த புனித நாளில் அனைத்து இதயங்களிலும் நிலைபேறு தன்மையை உருவாக்கிக் கொள்வது முக்கியமாகும்.