சஜித் பிரதமரானால் அவரை ஆதரிக்கத் தயார் – சுதந்திரக் கட்சி

எதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருந்தால், அவருக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், நாடாளுமன்றத்தில் உள்ள சுயேச்சைக் குழுவும் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே தாம் பிரதமர் பதவியை ஏற்பேன் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.