(ஹஸ்பர் ஏ.எச்)
திருகோணமலை தமிழ் அமுதம் கலை வட்டத்தின் ஏற்பாட்டில் உ . சதுர்த்திகா எமுதிய ஆர்கலி கம்யூனிசமும் காதலும் என்ற கவிதைநூல் வெளியீட்டு விழா 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை பி.ப . 3.30 மணிக்கு திருகோணமலை மாநகரசபை மண்டபத்தில் தமிழ் அமுதம் கலை வட்டத்தின் தலைவி திருமதி. சுஜந்தினி யுவராஜா தலைமையில் இடம் பெறும்.
இந் நிகழ்வின் முதன்மை அதிதியாக திருகோணமலை மாநகர முதல்வர் க . செல்வராஜா (சுப்ரா) வும் சிறப்பு அதிதிகளாக திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திருமலை நவம், வவுனியா தேசிய கல்வியியற்கல்லூரி விரிவுரையாளர் சி. சிவகணேஷ் ஆகியோர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
விழாவில் நூலின் முதல் பிரதியை நூல் ஆசிரியர் திரு. திருமதி உதயகுமார் அவர்களுக்கு வழங்கி வெளியீட்டு வைப்பார்.
நூல் அறிமுக உரையினை அ. டனுசனும் நயவுரையினை கவிஞர் தி. லலிதகோபனும் நூல் விமர்சனத்தை யாழ் பல்கலைக்கழக பொறியியற் பீடத்தில் கல்விகற்கும் செல்வி. ஸ்ரீ. ஹம்சனா ஆகியோர் வழங்குவார்கள்.


