ஹஸ்பர் ஏ.எச்_
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெய கௌரி ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார, கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார், உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எஸ்.லதா மங்கேஸ் உட்பட பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் சக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த சாகித்திய விழாவில் மாவட்ட அரசாங்க அதிபர் அமோக வரவேற்பளிக்கப்பட்டார்.
பிரதேச மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் இடம் பெற்ற கலாசார நிகழ்வில் வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ் பரிசில்களும் வழங்கப்பட்டதோடு கலைஞர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கலை கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டதுடன் பிரதேச செயலக கலாசார “ஏர்முனை” நூல் பிரதியும் வைபவ ரீதியாக வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் முதற் பிரதியை மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் கலைஞரின் வாழ்வியலை கொண்ட சுவாரஸ்யமான நாடக நிகழ்வும் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் மூவின சமூகங்களை சேர்ந்த கலை கலாசார நிகழ்வுகள் சமூக இன ஒற்றுமைக்காக வழி வகுப்பதுடன் இதனை வரவேற்பதாகவும் கூறினார்.


