எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, மண்முனைமேற்கு பிரதேச செயலக கலாச்சாரப் பேரவையும் கலாச்சார அதிகார சபையும் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேசக் கலாச்சார விழாவும் கலை இலக்கிய பெருவிழாவும் பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் (14) இடம்பெற்றது.
பிரதேச செயலக கலாச்சாரப் பேரவை மற்றும் கலாச்சார அதிகாரசபை இணைந்து பிரதேச மட்டத்திலான கலை இலக்கியத் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பமாக மாணவர்களிடையே கவிதை, சிறுகதை, பாடல நயத்தல், கதை சொல்லுதல் போன்ற போட்டிகளை பாலர், சிறுவர், கனிஷ்ட, சிரேஷ்ட, அதி சிரேஷ்ட ஆகிய பிரிவு மட்டங்களிலும், திறந்த பிரிவில்
சிறுகதை, மரபு மற்றும் புதுக் கவிதை, சிறுவர் கதை, ஆக்கப் போட்டி மற்றும் திரைப்பட விமர்சனம் என்பன போன்ற பல போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச கலை மன்றங்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டதுடன், நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும் வழங்கப்பட்டன.
இதன் போது 2024ம் ஆண்டு இலக்கியப் போட்டியில் பிரதேசத்திலிருந்து தேசிய ரீதியான போட்டிகளில் பங்குபற்றிய மாணவியை பாராட்டி கௌரவம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மண்முனைமேற்கு பிரதேச சபையின தவிசாளர், வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கலாச்சாரப் பேரவை மற்றும் அதிகார சபை உறுப்பினர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


