பொத்துவில் பிரதேசத்திற்கு வருகை தந்த அனுராதபுர இளைஞர் யுவதிகள்

நூருல் ஹுதா உமர்

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற இளைஞர் பறிமாற்று (Youth Link) வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக அம்பாறை மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த இளைஞர் பறிமாற்று வேலைத்திட்டத்திற்கமைய அநுராதாபுர மாவட்டத்தில் இருந்து இளைஞர் யுவதிகள் நாவிதன்வெளி பிரதேசத்திற்கு விஜயம் செய்து உள்ளார்கள்.

இன் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக பொத்துவில் பிரதேசத்திற்கு வருகை தந்து பொத்துவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல், முஹுது மஹா விகாரை, மணல் மலை, அறுகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர்

இளைஞர்களிடையே இன ரீதியாக ஒற்றுமையினை வளர்த்து சமூக நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தி எதிர்காலத்தில் அனைவரும் ஒற்றுமைப்பட்டு இலங்கையர்களாக வாழ வேண்டும் என்கிற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத் திட்டத்தில் மத ஸ்தலங்களை தரிசித்து அவர்களின் கலாச்சாரங்கள் விழுமியங்கள் மத வழிபாடுகள் பண்பாடுகள் மற்றும் பாரம்பரியங்கள் தொடர்பாக அறிந்து கொள்வதும் ஒரு அங்கமாகும்.

மேற்படி நோக்கங்களை மையமாகக் கொண்டு வருகை தந்த இளைஞர் யுவதிகளுக்கான சுற்றுலாப் பயண நிகழ்வுகளை பொத்துவில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஏ.ஜீ அன்வர் மற்றும் பொத்துவில் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டன.

இந் நிகழ்வில் முன்னாள் சம்மேளன தலைவர் உட்பட இளைஞர் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.