அரச காணிகள் மற்றும் காணி தொடர்பான பிணக்குகளை தீர்பதற்கான இரு நாள் பயிற்சி பாசறை

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

அரச காணிகள் மற்றும் காணி தொடர்பான பிணக்குகளை தீர்பதற்கான இரு நாள் பயிற்சி பாசறையானது கிழக்கு மாகாண காணி ஆணையாளர் திருமதி வளர்மதி ரவீத்திரன் தலைமையில் சர்வோதயா மண்டபத்தில் (08) இன்று இடம் பெற்றது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்களுக்கான விழிப்புணர்வூட்டும் பயிற்சி பாசறை நடைபெற்றன.

இதன் போது காணி தொடர்பான சட்ட எற்பாடுகள், காணி பிணக்குகளை கையால்வதற்கான போறிமுனறகள், மற்றும் உபாய முறைகள் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் ஓய்வு பெற்ற காணி ஆணையாளர் நாயகம் எஸ்.டி.ஏ.பி. பொரலஸ்ல அவர்களினால் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இவ் பயிற்சி பாதையின் போது அதிகாரிகளின் ஐய வினாக்களுக்கான விளக்கங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.