மாகாண சபைத் தேர்தலை நடாத்த பயப்படும் அரசு…! நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் 19.11.2025 . அமைச்சர் மகிந்த ஜயசிங்ஹ அவர்களே , முதலில் ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளுங்கள்; அதன் பின்னர் மாகாண சபைகள் குறித்து பேசலாம். இன்று ஆசிரியர்கள் உங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலில் அந்த பிரச்சினைகளைச் சமாளித்து விட்டு, பிறகு ஜனாதிபதி மாகாண சபைகள் குறித்து என்ன கூறினார் என்பதைத் தெரிவியுங்கள். நீங்கள் என்ன கூறினீர்கள்? உங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் என்ன உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது?
இன்று மதியம் நாம் அனைவரும் ஜனாதிபதியை சந்தித்து இந்த விடயத்தை அவரிடம் தெரிவித்தோம். எனவே தயவு செய்து அவசரப்பட வேண்டாம்; அமைதியாக இருங்கள். மாண்புமிகு தலைவர் அவர்களே, மாகாண சபைத் தேர்தல் எங்கள் மக்களுக்கும் எமது கட்சிக்கும் பெரும் முக்கியத்துவமான ஒன்று. நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்களுக்கு இது எவ்வாறு தோன்றுகிறது, மற்ற கட்சிகள் இதைப் பற்றி எவ்வாறு எண்ணுகின்றன என்பது எமக்குத் தெரியாது. ஆனால் நான் பிரதிநிதித்துவம் செய்கிற கட்சிக்குப் இது மிக மிக முக்கியமான தேர்தல்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களும், ஒரு ஆண்டிற்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என எங்கள் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நம்பியே எங்களைத் தேர்ந்தெடுத்தனர் என்று நான் தெளிவாக நம்புகிறேன். அந்த பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இன்று அந்த பொறுப்பு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதை நான் மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.
சிறிய குடிசைகளில் வாழும் மக்கள் துன்பப்படுகிறார்கள்; அதேவேளை அதிகாரிகள் பொதுமக்களின் துயரத்தைப் புறக்கணிக்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்க்கட்சியாக நாங்கள் இக்காரணத்தில் ஒன்றுபட்டுள்ளோம்.
நான் சமர்ப்பித்த தனியார் உறுப்பினர் மசோதா குறித்து — நீங்கள் அந்த மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வர அஞ்சுகிறீர்கள் என்றால், அதை முன்வைக்கத் தயங்குகிறீர்கள் என்றால், மாண்புமிகு அமைச்சரே, உங்களுக்கு உண்மையில் உறுதியும் பொறுப்புணர்ச்சியும் இருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டுமாயிற்று? இந்தப் பாராளுமன்றம் ஆரம்பித்ததிலிருந்து எத்தனை முறை இந்த விவகாரம் முன்வைக்கப்பட்டிருக்கிறது? உங்களுக்கு உண்மையில் தைரியம் இருந்திருந்தால், அன்றே ஒரு குழுவை நியமித்து விசாரணையை ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் வருடக்கணக்கில் தாமதப்படுத்தி அரசியல் விளையாட்டில் ஈடுபட்டீர்கள்.
இது ரணில் விக்கிரமசிங்க அவர்களின் நடைமுறையையே ஒத்திருக்கும்—தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கில் குழுக்களை நியமிப்பது. நீங்கள் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் நெருங்கிய ஆதரவாளராகவே நடந்து கொண்டுள்ளீர்கள் என்று தெரிகிறது. வெறும் தேர்தலை தள்ளிப் போடுவதற்காக குழுக்களை அமைக்கிறீர்கள்; இதற்கு வெட்கமில்லையா?
மாகாண சபைத் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். இதன் அவசியம் இந்த அறிக்கையிலேயே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையைப் பற்றி — இன்று மதியம் ஜனாதிபதியைச் சந்தித்தபோது நான் இதைப் பார்த்தேன். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 2017 மாகாண சபைச் சட்டத்தை திருத்தாமல் என் தனியார் உறுப்பினர் மசோதாவை எடுத்துக்கொள்ள முடியாது என. ஆனால் என் மசோதா 2017 திருத்தச் சட்டத்தை ரத்து செய்து முந்தைய முறைக்கு திரும்புவதை முன்வைக்கிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றமும் தன் கருத்தை வழங்கியுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் தாமதமாகும் காரணம் அரசியல் என்றால், அதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் சட்டத்தைப் புறக்கணித்து, நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்தி, தேவையற்ற குழுக்களை நியமித்து தேர்தலை நடத்தாது தப்பிக்க முயற்சிப்பது—இது மிகவும் கீழ்த்தரமானதும் கண்டிக்கத்தக்கதுமான செயல்.
ஏனெனில் இவ் தேர்தல் அது உங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே வழங்கப்பட்ட வாக்குறுதி. அது உங்கள் கட்சியின் கொள்கை அறிக்கையாகும், நீங்கள் அதை நிறைவேற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு.
மாண்புமிகு தலைவர் அவர்களே, பாராளுமன்ற நிலை ஒழுங்கு 52ன் படி, தனியார் உறுப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட எனது தேர்தல் மசோதா தொடர்பாக அமைச்சர் சமர்ப்பித்த அறிக்கையை நான் பெற்றுள்ளேன்.
இந்த மசோதாகை நான் சமர்ப்பித்தது மே மாதத்தில், மேலும் ஜூன் மாதத்தில் அதற்கான ஆரம்ப பரிசீலனை நடைபெற்றது.
நான் சமர்ப்பித்த மசோதாவும், அமைச்சர் தனது அறிக்கையில் கூறியவற்றும் ஒன்றோடொன்று பொருந்தவில்லை. அமைச்சரின் அறிக்கையில் சட்டமா அதிபர் கூறியதாவது நான் சமர்ப்பித்த மசோதாகை, முன்னாள் பாராளுமன்றத்தில் திரு. சுமந்திரன் சமர்ப்பித்த அதே மசோதா என்றும், அதற்கு உச்சநீதிமன்றம் வழங்கிய வழிமுறைகள் இதில் சேர்க்கப்படவில்லை என்பதால் இதனை ஏற்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது இது முற்றிலும் தவறானது.
திரு. சுமந்திரன் மசோதாகை சமர்ப்பித்தபோது, அது பாராளுமன்றத்தின் தொடர்புடைய குழுவிற்கு அனுப்பப்பட்டது. தனியார் உறுப்பினர் மசோதாக்களுக்கு வழங்கப்படும் நடைமுறைகளின் படி, அந்தக் குழு சில பரிந்துரைகளை வழங்கியது. மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மசோதாகை திருத்தப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப அந்த மசோதாகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
அதைச் தொடர்ந்து, நான் இந்த முறை தனியார் உறுப்பினர் மசோதாகை சமர்ப்பிக்கும் போது, உச்சநீதிமன்றம் முன்வைத்த அனைத்து நிபந்தனைகளையும் இணைத்து உள்ளோம்.
ஆனால் மாண்புமிகு அமைச்சர் உண்மையை மறைக்கிறார். இதில் உண்மையாக அவர் ஈடுபடவில்லை; பாராளுமன்றத்திற்கும் மக்களுக்கும் தவறான தகவலை வழங்குகிறீர்கள்.
தயவு செய்து அமைதியாக இருங்கள்; இவை குறித்து உங்களுக்கே தெரிவதில்லை அதற்குரிய விளக்கமும் இல்லை. அதிகாரத்தில் இருக்கும் போது நீதிமன்ற வழக்குகளில் இருந்து சில விரைவான வருமானம் பெறுவது தவிர, இந்த விஷயங்களில் எந்த புரிதலும் உங்களுக்கு இல்லை.
மாகாணசபை தேர்தல்கள் குறித்து நீங்கள் கருத்து சொல்லத் தேவையில்லை. அப்போது நீங்கள் எதிர்த்தீர்கள்; இன்றும் அதே நிலைப்படி உள்ளீர்கள். எனவே உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி எங்களை ஏமாற்ற முயலாதீர்கள். அதை வேறு யாருக்காவது சொல்லலாம்; ஆனால் என்னை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம்.
மாண்புமிகு தலைவர் அவர்களே, நாங்கள் ஜனாதிபதியை மதிக்கிறோம். இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் அவரை சந்தித்தோம். மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறும் என்று ஜனாதிபதி தெளிவாக கூறினார். மேலும் இந்த மண்டபத்திலேயே, தேவையான சட்டத்தை எதிர்க்கட்சியே கொண்டு வர வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல்தலை நடத்துவதற்குப் நீங்கள் பயப்படுகின்றீர்கள். வடக்கு மற்றும் கிழக்கில் இன்று அரசாங்கத்தின் செல்வாக்கு இந்தப் புத்தர் சிலை விவகாரத்தில் இல்லாமல் போய்விட்டது. ஜனாதிபதி நேற்று சொல்கிறார் முடிந்தச் சம்பவம் என்று ஏன் இந்த முடிந்தச் சம்பவத்தை பற்றி ஏன் இன்னும் பேச்சுகிறீர்கள் என்று. அந்தச் சிலை அந்தடத்திலே இருக்கும் போது இவ் சம்பவம் முடிந்த சம்பவமா ..! அவ் சிலையானது காலம் காலமாக இவ் அரசின் இனவாதமான செயல்பாட்டினை வரும் சந்ததிக்கும் நினைவூட்டும் முகமாகவே அமையும்.
அந்தச் சிலை பாக்கும் போதெல்லாம் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் என்ன செய்வார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சொல்லிவிட்டார்.
இன்னொன்று கால்முனை வடக்குப் பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரச்சனை அதிலே எமக்கும் முஸ்லீம் காங்கிரசிற்கும் மாறுப்பட்ட கருத்து காணப்படலாம் . இருப்பினும் இதனை தீர்க்காது அரசு இதனை வைத்து இரு இனங்களுக்கு இடையில் அரசியல் செய்கின்றது


