தரவுத்தளத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட பயிற்சி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அங்கவீனமுற்ற நபர்கள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் முதியோர்களின் தரவுத்தளத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட பயிற்சி நெறியானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி சந்திரகலா கோணேஸ்வரன் ஒழுங்குபடுத்தலில் புதிய மாவட்ட செயலகத்தில் (20) இன்று இடம் பெற்றன.
நலன்புரி நன்மைகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் தரவுத்தளத்தில் அங்கவீனமுற்ற நபர்கள், சீறுநீர நோயாளர்கள் மற்றும் முதியோருக்கான கொடுப்பனவுகளை ஒருமித்த வகையில் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதை நோக்காக கொண்டு இத்தளம் பேணப்படுகின்றது.

மாவட்டத்தில் 14 பிரதேச பிரிவுகளைச் சேர்ந்த 31096 பயனாளிகளின் தரவுகள் இத்தரவுத்தளத்தில் இன்றைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயனாளிகளின் தரவுகளும் இத்தளத்தில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளன.