(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில், பொத்துவில் லாஹுகல பிரதேசத்தின் நகர அபிவிருத்தி தொடர்பாக துறைசார் பணிப்பாளர்கள், தலைவர்கள், பொதுமக்களுடனான கலந்துரையாடல் (19) புதன் கிழமை பொத்துவில் பிரதேச சபை நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில், திகாமடுல்ல மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா, பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் முதுநபீன் முஷர்ரப், பிரதேச சபை உறுப்பினர்களான ரீ. புனிதன், ஏ.எஸ். மஹ்ரூப், தேசிய மக்கள் சக்தியின் பொத்துவில் பிரதேச இணைப்பாளர் ஆதம் சலீம், முப்படையினர், துறைசார் பணிப்பாளர்கள், தலைவர்கள், உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


