ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தொடர்ச்சியாக இன்று (17) 62 ஆவது நாளாகவும் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாரி மழையையும் பாராது திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக தங்களது அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை மீள பெற்றுத் தரக்கோரிய சத்தியாக் கிரகத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
சூரிய மின் சக்தி உற்பத்திகளுக்காக தங்களது விவசாய காணிகளை தனியார் கம்பனிகளுக்கு வழங்கியதையடுத்து இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இது தொடர்பில் பல போராட்டங்களை நடாத்திய போதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் ஜனாதிபதி ஊடாகவோ மாவட்ட ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்,பிரதியமைச்சர் மூலமோ தீர்வு கிடைக்கல்லை என்றும் இரட்டை வேடம் போட்டு நாடகமாடி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். பிரதமர் ஹரினி அமர சூரிய வழங்கிய வாக்குறுதி முடிவுற்று இரண்டாவது தடவையாக மீண்டும் 13.11.2025 ந் திகதியன்று பிரதமர் அலுவலகம் சென்றபோது 10 நாட்களுக்குல் திருகோணமலையில் கலந்துரையாடல் ஒன்று மூலம் இணக்கம் காண முடிவு எட்டப்படுவதாக முத்து நகர் ஒன்றினைந்த விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது.


