எப்.முபாரக்
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ கிராமத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மொரவெவ பொலிஸார் (16) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் ஏ.எஸ். சாஹிர் முன்னிலையில் வழக்கை ஆஜர்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் அதே (வயது 43) என்பதும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே ஹெராயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 2021 ஏப்ரல் மாதம் 25ம் திகதி முதல் திருகோணமலை சிறைச்சாலையில் 53 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தால் 2025 செப்டம்பர் 25ம் திகதி விடுவிக்கப்பட்டார்.
இதையும் மீறி, விடுவிக்கப்பட்ட சந்தேக நபர் போதைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்தும் பொலிஸ் நிலையத்திற்கு தகவல்களை வழங்கி வந்தனர்.
இந்த நிலையில், சந்தேக நபர் தொடர்பில் புலன் விசாரணைகளை முன்னெடுத்து இருந்த போதிலும் அவர் கைது செய்யப்படவில்லை.
இதேவேளை அவர் வசித்து வந்த வீட்டை திடீரென சோதனை செய்த போது, அவரிடமிருந்து ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


