மாவீரர் தின அனுஸ்டிப்பினை முன்னிட்டு மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் 5000 பனை விதைகள் நடும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
எதிர்வரும் கார்த்திகை 27ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கும் முகமாக பல்வேறு பிரத்தியேகச் செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த அடிப்படையில் இன்றைய தினம் ஆயித்தியமலை 06ம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்றது.
மறத்தமிழர் கட்சியின் இணைப்பாளர் ந.குணசிவரூபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், பிரதேச பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது உன்னிச்சை 06ம் கட்டைப் பகுதியில் களிக்குளத்தை அண்டிய பிரதேசத்தில் பனை விதைகள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


