பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல்.

ஹஸ்பர் ஏ.எச்_

பத்தரமுல்லையில் அமைந்துள்ள சமூக சேவைகள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் மற்றும் சமூக நலன் புரி அத்தியட்சகர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று (15) திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் அமைந்துள்ள பகல் நேர பராமரிப்பு நிலையத்தை பார்வையிட்டு, அதற்குரிய முன்னேற்ற நிலைகளை பரிசீலனை செய்தனர்.

மேலும் நிலையத்தின் செயல்திறனை உயர்த்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய சில மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட பொறியியலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.