கவிச்சுடர் சிவரமணியின் “இரு துருவங்கள்” நூல் வெளியீட்டு விழா..!

( அ . அச்சுதன் )

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் அகரம் மக்கள் கலைக்கூடம் அனுசரனையுடன் கவிச்சுடர் சிவரமணியின் ” இரு துருவங்கள்” எனும் கவிதை நூலின் வெளியீட்டு விழா திருகோணமலை தபால் நிலைய வீதியில் உள்ள குளக்கோட்டன் ஒன்றுகூடல் மண்டபத்தில் சனிக்கிழமை (15 ) காலை 10.00 மணிக்கு இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு திருகோணமலை தமிழ்ச்சங்கத் தலைவர் மூத்த எமுத்தாளர் திருமலை நவம் தலைமை வகித்தார்.

திருகோணமலை மாநகராட்சி மன்றத்தின் முதல்வர் கந்தசாமி செல்வராசா (சுப்ரா) முதன்மை அதிதியாகவும் , பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் துரை மனோகரனும், தினகரன்/ தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர் , சிறப்பு அதிதியாகவும் , புரவலர் ஹாசிம்உமர் விசேட கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்தனர்.

இந்நூல் வெளியீட்டின் போது நயஉரை, அதிதிகள் கௌரவிப்பு, அதிதிகள் உரை, ஏற்புரை என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வில் திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் குரு ஆசியுரை வழங்கினார். திருமலை நவம் தலைமை உரையையும், ஒய்வு நிலைப் பிரதி அதிபர் மர்ழியா சக்காப் அறிமுக உரையையும் வழங்கினர்.

இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக சிற்றிதழ் ஆசிரியர் எஸ்.ஆர். தனபாலசிங்கம், சட்டத்தரனி ஐஸ்வர்யா பிரசாதனன், வவுனியா தமிழ் எழுத்துச் செயலாளர் சந்திரகுமார் கண்ணன், ஓய்வு நிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் ஒப்பிலாமணி குலேந்திரன், எண்ணம் போல் வாழ்க்கை தலைவர் கனக தீபகாந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து சிறப்பித்தனர்.

திருகோணமலை மாநகராட்சி மன்றத்தின் முதல்வர் கந்தசாமி செல்வராசா (சுப்ரா) நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாசிம்உமர் அவர்களுக்கு வழங்கி வெளியீட்டு வைத்தார்.

நிகழ்வின் நிகழ்ச்சி தொகுப்பை திருமதி. கவிஞர் சுஜந்தினி யுவராஜா வழங்கினார்.