நவம்பர் மாதம் தொடக்கத்தில் இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் உள்ள கிரேஸ் ஹார்பர் குடியிருப்பாளருக்கு, இன்ஃப்ளூயன்ஸா A H5 என்ற ஒரு வகை பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனை நடவடிக்கையின் போது இது H5N5 என்ற வைரஸ் எனக் கண்டறியப்பட்டள்ளது.
இதற்கு முன்னர் இது விலங்குகளில் பதிவாகியுள்ள ஒரு பறவைக் காய்ச்சல் வைரஸ் எனவும், இதற்கு முன்பு மனிதர்களிடம் காணப்படவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குறித்த தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நபரின் வீட்டின் பின்புறத்தில் கோழிகள் வளர்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது, அந்த வீட்டுக் கோழிகள் காட்டுக் கோழிகளுடன் இணைந்து திரிவதாகவும், இந்த காட்டு பறவைகளால் குறித்த வைரஸ் பரவியிருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


