பாறுக் ஷிஹான்
அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று(29) இடம்பெற்றது.
அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின் ஒருங்கிணைப்பிலும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ தலைமையில் அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ.விக்ரம கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுல ரத்நாயக்க, எம்.எஸ்.உதுமாலெப்பை, ஏ.ஆதம்பாவா, எம்.எஸ்.அப்துல் வாசித், முத்து ரத்தத்த, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் தலங்கம உள்ளிட்ட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள்,பாதுகாப்பு உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
—


