ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற நிலை குறித்து பரிசீலிக்கும் கலந்துரையாடல் நேற்று (24) மாவட்ட செயலகத்தின் உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களின் பங்கேற்புடன், மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம், எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.
மேலும், திட்டங்கள் திட்டமிடப்பட்ட காலக்கட்டத்திற்குள் நிறைவேற்றப்படுவதற்கான வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் இடையே கலந்துரையாடப்பட்டன.


