நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருதில் உடனடி நூடுல்ஸ் விற்பனை வாகனம் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் இன்று (24) சுற்றிவளைப்புக்குட்படுத்தப்பட்டது
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது மாளிகா வீதியில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனத்தின் மூலம் உடனடி நூடுல்ஸ் தயாரித்து விற்பனை செய்த நிறுவனத்தின் வாகனம், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் சுற்றிவளைப்புக்குட்படுத்தப்பட்டது.
இச்சுற்றிவளைப்பின்போது, அந்த உணவு வாகனத்தில் பணியாற்றிய உணவு கையாளுபவர்களின் மருத்துவநலச் சான்றிதழ்கள் பரிசோதிக்கப்பட்டன. மேலும், அவர்கள் சுகாதாரமான உணவு தயாரிப்பு மற்றும் பரிமாற்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் விரிவான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையின் முடிவில், பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் அவ்வூர்தி பொதுவழியில் நிறுத்தப்பட்டிருந்ததால், அது உடனடியாக அப்பாதையில் இருந்து அகற்றுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்தினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
இச்சுற்றிவளைப்பில் சுகாதார வைத்திய அதிகாரி, மற்றும் சாய்ந்தமருது பிரிவின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


