நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் பதில் உதவிப் பிரதேச செயலாளராக கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி கடமையேற்ற இலங்கை நிர்வாக சேவை தரம்-111 ச் சேர்ந்த வீ.வாஸித் அஹமட் இன்றைய தினத்திலிருந்து சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் நிரந்தர உதவி பிரதேச செயலாளராக தனது கடமைகளை இன்று(24) சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பதியத்தலாவ உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் இன்று முதல் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் நிரந்ததமான உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றவுள்ளர் என்பதோடு இவருக்கான நியமனத்தினை அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரமவினால் வழங்கப்பட்டது.
நிந்தவூரினை பிறப்பிடமாக கொண்ட வி.வாஸீத் அஹமட் பதியத்தலாவ, மகாஓயா ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கடமைப்பெறுப்பேற்கும் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா, நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமில், ஆகியோர் கலந்து கொண்டனர்.


