தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு நிகழ்வு சம்மாந்துறையில் !

நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை பிரதேச சபையின் கீழ் உள்ள நூலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த “மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு நிகழ்வு அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எழுத்தாளரும், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரியுமாக டாக்டர் நௌசாத் முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் வீ.வாஸித் அஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஹாதிக் இப்ராஹீம், பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முபிஸால் அபூபக்கர், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.பஸ்மிலா, சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.சுல்பா, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல்.ஏ.மஜீட், நூலகர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதேவேளை, தெரிவு செய்யப்பட்ட சிறந்த வாசகர்கள் பொன்னாடை போர்த்தி, சான்றிதழ்களுடன் கௌரவிக்கப்பட்டனர்.

2025 ஆம் ஆண்டு தேசிய மற்றும் மாகாண ரீதியாக இலக்கியத் துறையில் விருது பெற்றவர்கள் குறித்த நிகழ்வில் நினைவுச்சின்னம் மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதன்போது, புத்தகக் கண்காட்சியில் பங்கேற்ற ஒவ்வொரு புத்தக நிலையங்கள் மற்றும் சமூக தொண்டு அமைப்புகளும் நூலகங்களுக்கு ஒரு தொகுதி புத்தகங்கள் அன்பளிப்பு செய்தனர்.