NPP பிரதி அமைச்சர் சதுரங்காவின் இலஞ்ச ஊழல் அம்பலமாகியது!

.இன்றைய நாடாளுமன்ற விவாதத்தில் இரண்டு முக்கிய விடயங்கள் கவனத்திற்கெடுக்கப்பட்டன.

உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் அரிசி வரி கொள்கை மாற்றங்கள்:
உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதன் நோக்கம் — உள்ளூர் விவசாயிகளை ஊக்குவிப்பதே.

ஆனால், பொன்னி சம்பா அரிசி தட்டுப்பாட்டை சமாளிக்க அரிசி இறக்குமதி வரிகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் விளைவாக, தற்போது மக்கள் நியாயமான விலையில் அரிசியை வாங்க முடியும் என்றாலும், அடுத்த போகத்தில் நெல் அறுவடை காலத்தில் நெல்லின் விலை கணிசமாக குறையும் அபாயம் உள்ளது. இது விவசாயிகளை கடுமையான நெருக்கடிக்குள் தள்ளக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மதுவரித் திணைக்களம் மற்றும் அனுமதிப்பத்திர விவகாரம்:
மதுவரித் திணைக்களம் முன்பு எதனோல் உற்பத்தியாளர்களுக்கு 6 மாத வரி செலுத்துதல் அவகாசம் வழங்கியிருந்தது. தற்போது அது ஒரு மாதத்திற்குள் வரியை கட்ட வேண்டும் என மாற்றப்பட்டுள்ளது — இது நல்ல முடிவாகக் கருதப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில், தேர்தல் இலஞ்சமாக Bar Permit அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசாங்கம் இதனை ஒப்புக்கொண்டு பட்டியலையும் வாசித்திருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தில் 5,000 வாக்காளர்களுக்கு ஒரு Bar என்ற விகிதத்தில் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், அரசாங்க பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் இணைந்து, களுத்துறை மாவட்டத்தில் உள்ள Kingsberry Hotel இல் ஒரு Cooperative நிறுவனத்துக்குச் சொந்தமான Brewery License-ஐ விற்பனை செய்ய முயன்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால், ஒரு புறம் அரசு வரி உயர்த்தல் மற்றும் ஒழுங்கு பேணல் குறித்து பேசிக்கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் சட்டவிரோத நடவடிக்கைகளைப் புறக்கணித்து அரசியல் நலனுக்காக பாதுகாத்து வருகின்றது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.