சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வுகள்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வுகள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் பூரண ஏற்பாட்டில், அபிவிருத்திக்குழுச்செயலாளர் பொறியியலாளர் எம். சி.கமால் நிஸாத் அவர்களின் நெறிப்படுத்தலில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது.

இறுதி நிகழ்வுக்கு பாடசாலை அதிபர் திருமதி எம் எச் நுஸ்ரத் பேகம் தலைமை தாங்கியதோடு, அம்பாறை மாவட்ட செயலக மாவட்டப் பொறியியலாளர் ஏ.எம். சாஹிர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மற்றும் பாடசாலையின் உதவி, பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் முன்னாள் அதிபர்களான ஐ.எல்.ஏ. மஜீட், யூ.எல். நஸார், சாய்ந்தமருது டவுன் ட்ராவல்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜலீல், டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியப்பணிப்பாளர் டாக்டர் ஸனா மற்றும் பொது முகாமையாளர் நஜீம், நலன்புரி முகாமையாளர் அஜ்வத் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வானது இரண்டு கட்டமாக நடைபெற்றது.

முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கு விளையாட்டுச் செயற்பாடுகளுடன் கூடிய தலைமைத்துவ பயிற்சி மற்றும் முகாமைத்துவம் சம்பந்தமான விளையாட்டுகள் இடம் பெற்றதோடு, இதில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையினால் நினைவுப் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

அடுத்த கட்டமாக ஆசிரியர்களுக்கு மேடை நிகழ்ச்சிகள் இடம்பெற்ற தோடு, பாடசாலை நலன்விரும்பிகள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட விசேட பரிசுகளும், நினைவுப் பரிசுகளும் இதன்போது ஆசிரியர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இறுதியாக பகல் போஷனத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

பாடசாலை அபிவிருத்தி சங்க நிறைவேற்றிக் குழுவினரின் கோரிக்கையை முன்னிட்டு, சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான மருத்துவ முகாமொன்றும் இப்பாடசாலையில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இம்மருத்துவ முகாம் பெற்றார் சமூகத்தின் ஆதரவோடு இடம்பெற்றது.

இதில் பாடசாலை யின் ஆசிரியர்கள் உட்பட அதிபர், பிரதி, உதவி அதிபர்களும் இம்மருத்துவ முகாமில் இணைந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வருட ஆசிரியர் தின நிகழ்வுகள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் முழுமையான ஏற்பாட்டிலும் நெறிப்படுத்தலிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது விசேட அம்சமாகும்.