மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச முதியோர் தின வார்த்தை முன்னிட்டு வட கிழக்கு மாகாணங்களுக்கான விஷேட சைவ சமய நிகழ்வுகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

முதியோருக்கான தேசிய அலுவலகத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வதேச முதியோர் தின வார்த்தை முன்னிட்டு வட கிழக்கு மாகாணங்களுக்கான விஷேட சைவ சமய நிகழ்வுகள் இடம் பெற்றன.

உதவு மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் குருக்கள் மடத்தில் அமைந்துள்ள அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வுக் கழகத்தின் (ADVRO) முகாமையாளர் கலாபூசனம் கா.சந்திரலிங்கம் தலைமையில் இடம் பெற்றன.

பாரம்பரிய முறையில் இடம் பெற்ற நிகழ்வில் முதியோர்களது கலைநிகழ்வுகள் சிவநெறிமன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்களது பஜனைகள் மற்றும் பாடல்கள் இதன் போது இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே. சுகுணன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர், மாவட்ட முதியோர் சம்மேளனத்தின் தலைவர், பிரதேச செயல சமூக சேவை உத்தியோகத்தர்கள், முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், குருக்கள் மடம் முதியோர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்