அக்கரைப்பற்றில் ஜன்னாஹ் வீதி திறந்து வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கிராமப்புற வீதிகள் மேம்பாட்டுத்திட்டம் 2025க்கு அமைவாக அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஜன்னாஹ் வீதி (14) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் பங்குபற்றலுடன் ஜன்னாஹ் வீதி, 7.2 மில்லியன் செலவில் வீதி அபிவிருத்தி அதிகார சபை பங்களிப்புடன் திறந்து வைக்கபட்டது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் அப்துல் பாரி மற்றும் அதன் உத்தியோகத்தர்கள், அக்கரைபற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. ராஸிக், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் ரமீஸ் முகைதீன் மற்றும் ராஸி முஹம்மத், அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சுஹைப், அக்கரைப்பற்று பிரதேச தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் அபூ சஹீத், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.