சிறந்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் Guru awards – 2025 விருது விழா!

Oplus_131072

அபு அலா

ஊடக உலகில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கெளரவிக்கும் பிரம்மாண்டமான விருது வழங்கும் விழா குரு ஊடக வலையமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் ஹிசாம் ஏ. பாவா தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் (12) இடம்பெற்றது.

குரு ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்விருது வழங்கல் விழாவுக்கு மயோன் குரூப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரும் தொழிலதிபருமான எம்.எம்.றிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாகவும், வசந்தம் தொலைக்காட்சி செய்திப் பிரிவின் முகாமையாளர் எம்.எஸ்.எம்.இர்பான் விஷேட அதிதியாகவும், சட்டத்தரணி எம்.கே.எம்.பர்சான், நெஸ்ட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியாளர் என்.எம்.சப்னாஸ் ஆகியோர் கெளரவ அதிதிகளாவும்
கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஊடகத்துறையில் சிறந்த சாதனையாளர்களை உலகிற்கு அடையாளங்காட்டும் இந்த உன்னதமான இவ்விருது வழங்கும் விழாவின்போது 2024/2025 இக்கான “சிறந்த சுகாதார மருத்துவ ஆக்கத்திற்கான விருதினை ஊடகவியலாளர் மட்டு.துஷாராவுக்கும்” (திருமதி துஷ்யந்தி சுரேஸ்), சிறந்த சுற்றுச்சூழல் ஆக்கத்திற்கான விருதினை சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயிலுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் சிறந்த விவரணம், சிறந்த மனிதாபிமான உரிமை தொடர்பான ஊடகவியலாளர்கள், சிறந்த வானொலி அறிவிப்பாளர்கள், சிறந்த விளையாட்டுத்துறை செய்தி அறிக்கையாளர், சிறந்த இளம் யூடியுப்பாளர்கள், சிறந்த கவிதை எழுத்தாளர், ஊடகத்துறையின் வாழ்நாள் சாதனையாளர் போன்ற பல்வேறுபட்ட துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.