சரீரம் – ஶ்ரீலங்கா தேசிய மன்றத்தின் தாளங்குடா மதுராபுரத்திலுள்ள கட்டடத்தினை ஏல விற்பனை செய்வதற்கு மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டடம் நாளைய தினம் வங்கியினால் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் சரீரம் – ஶ்ரீலங்கா தேசிய மன்றத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையடுத்து இத் தடையுத்தரவு இன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வங்கிக்கு இடைக்காலத் தடையுத்தரவுக்கான அறிவித்தல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சரீரம் – ஶ்ரீலங்கா தேசிய மன்றத்தின் சார்பிலான சட்டத்தரணி தெரிவித்தார்.