கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தினால் இலக்கிய மாதத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட “கிழக்கின் சிறகுகள் 2025” (Wings of East) மூன்று நாள் இலக்கிய நிகழ்ச்சியின் முதல் நாளின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், திருகோணமலை மாவட்ட பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கான சிறப்பு சொற்பொழிவு இன்று (08) திருகோணமலை மா நகர சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவின் தலைமையில் தொடங்கியது.
இலக்கியம், வாசிப்பு, எழுத்து மற்றும் இரசனை குறித்த சொற்பொழிவு, எழுத்தாளர் மற்றும் இலக்கிய அறிஞரான கிழக்கு மாகாண ஆளுநரால், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டது.
………………………