எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சுமார் 09 வருடங்கள் கணக்காளராக கடமையாற்றிய செல்வி. கே.சித்ரா அவர்கள் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று செல்லும் முகமாக அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது (07) பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம். எஸ்.சில்மியா , நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ். றஊப், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம். எம்.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பீ.ஜெயராஜ் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் போது பிரதேச செயலாளரினால் கணக்காளர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.