எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
சிறுவர் முதியோர் தின நிகழ்வு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் அண்மையில் (03) இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் சி. சுதாகர் தலைமையில் கற்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தவிசாளர் இ. திரேசகுமாரன், சுகாதார வைத்திய அதிகாரி, உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கோட்டக்கல்வி பணிப்பாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர் மற்றும் பாடசாலை அதிபர், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் , பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் , சிறுவர் மற்றும் முதியோர்களுக்கான சுவாரஸ்யமான விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெற்றதுடன் பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.