யாழ்ப்பாணம் பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 24 வயது இளைஞன் ஒருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரிடம் இருந்து மூன்று வாள்கள் மற்றும் கையடக்க தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த இந்த சந்தேக நபருக்கு எதிராக ஏற்கனவே சில குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, அவரை இன்று (08) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.