மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் ஏற்பாட்டில் ஆளுமை விருத்தி செயற்றிட்டம் முன்னெடுப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பில் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக பண்டாரவளை மற்றும் பதுளை. பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் 13,14 ,15 ஆம் திகதிகளில் மாணவர்களுக்கான ஆளுமை விருத்தி திட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மகராஜ் அவர்கள் கலந்துகொண்டார்.

லுனுகளை ராமகிருஷ்ண கல்லூரியில் முதலாவது நிகழ்வும் இதில் 300 மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்

மலை உச்சியில் கடைசி கிராமமான இயற்கை எழில் சார்ந்த பூனாகல வித்தியாலயத்தில் சுவாமி விவேகானந்தரின் திருவருவச் சிலை திறந்து வைக்கப்பட்டு மாணவர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது இதில் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஹல்து முல்லை சுவாமி விபுலானந்தர் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கிக்கிரிபத்தை சாரதா தேவியார் அறநெறி பாடசாலை பாடசாலை தொடங்கி வைக்கப்பட்டு மக்களுக்கு ஆசியுரை வழங்கப்பட்டது.

நிகழ்வுகளை கொஸ்லாந்தை திருவள்ளுவர் அறநெறிக்கழகத்தின் கவியரசன் அவர்கள் முன்னின்றி ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது