எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
Clean Srilanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சின் நிதி அனுசரணையுடன் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாரளுமன்ற அலுவல்கள் அமைச்சும், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகியன இணைந்து மட்டக்களப்பு கல்வி வலய உளவளத்துணை ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்றுனர்களுக்கான வதிவிட பயிற்சி பட்டறையானது 18.08.2025 ம் திகதி மட்டக்களப்பு சர்வோதயா பயிற்சி நிலையத்தில் அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாவட்ட செயலக போதைப்பொருள் முற்தடுப்பு பிரிவு மாவட்ட இணைப்பாளர் ப.தினேஸ் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இப் பயிற்சி நெறியின் வளவாளராக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜீ.வீ.எம்.றஷாட் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.