பிரதேச துரித அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

பிரதேச துரித அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலொன்று பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு பேரவை அங்கத்தவரும் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் (18) நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது.

சமூக செயற்பாட்டாளர் எஸார் மீராசாஹிப் ஏற்பாட்டில் அவரின் சாய்ந்தமருது இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் பர்ஹான் மொஹமட், பொறியியலாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர்.

விரைவில் புத்திஜீவிகள் மற்றும் துறைசார் வல்லுனர்கள், தொழிலதிபர்கள், ஆர்வலர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளடக்கலான மகாசபையொன்றை ஸ்தாபிப்பதன் மூலம் அதனூடாக ஆலோசனைகள் உள்வாங்கப்பட்டு துரித அபிவிருத்திகளை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.