எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் வாய் புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகளானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பதிகாரி இ. உதயகுமார் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் இன்று (05) இடம் பெற்றது.
இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இதன் போது துறைசார் நிபுணர்களினால் வாய் புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டனர். மேலும் மாவட்டத்தில் ஏழு நபர்களுக்கு ஒருவர் எனும் விகிதத்தில் புற்று நோய் தாக்கம் காணப்படுவதாக இதன் போது சுட்டிக் காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
புகைத்தல் மற்று புகையிலை போன்ற பொருட்களை பாவனை செய்வதனால் வாய் புற்றுநோய் தாக்கம் அதிகம் காணப்படுகின்றது.
மாவட்டத்தில் அதிகளவான நபர்கள் புற்று நோயிலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுவதனை முன்னிட்டு புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக பிராந்திய சுகாதார பணிமனையினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் முகத்தாடை சத்திர சிகிச்சை நிபுணர்.நவினி, பேராசிரியர் கருணாகரன், பிராந்திய பல்வைத்திய பொருப்பதிகாரி எஸ். கோகுலரமணன், மட்டக்களப்பு போக்குவரத்து சேவை முகாமையாளர் க.ஸ்ரீதரன் என பலர் கலந்து கொண்டனர்.


