சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்டம் 306டி, 10 இற்கான பதவி

ருத்திரன்
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்டம் 306டி, 10 இற்கான பதவி ஏற்பு விழா நிகழ்வு பாசிக்குடா சுற்றுலா விடுதியில் நடைபெற்றது.
306டி, 10 மாவட்டத்திற்குரிய ஆளுநர் லயன் க.லோகேந்திரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக லயன்ஸ் கழகத்தின் முன்னாள் சர்வதேச இயக்குனர் லயன் மகேஸ் பஸ்கால் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கழகத்தின் நிகழ்சித்திட்டத்தின்படி நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது.அதிதிகள் கலாச்சார ரீதியாக மேள வாத்தியத்துடன் வரவேற்கப்பட்டனர்.

இதன்போது லயனஸ் கழக வரலாற்றில் மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் லயனஸ் கழகங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டு 52 வருடங்கள் கடந்த நிலையில் சர்வதேச ரீதியில் ஆளுநராக மாவட்டத்தில் முதற் தடவையாக தெரிவு செய்யப்பட்ட லயன்.க.லோகேந்திரன் கௌரவிக்கப்பட்டாhர்.

மாவட்ட முதலாம் ஆளுநர் சாகீர் அகமட்,இரண்டாம் மாவட்ட ஆளுநர் ரி.ஆதித்தன் ஆகியோர்களின் பங்குபற்றுதலுடன் கழக அமைச்சரவை உத்தியோகத்தர்களும் தங்களது கடமைகளை மேற்கொள்வதற்கான பதவிப் பிரமானம் செய்து கொண்டனர்.அவர்களுக்கான கௌரவிப்புக்கள் வழங்கப்பட்ட பின்னர் கழகங்களுக்கான தலைவர் செயலாளர்,பொருளாளர்களுக்கான கௌரவிப்புக்கள் இடம்பெற்றனCbinet secretay m.t.m.. அனாப், cabinet tresurer .குணராஜா ஆகியோர்களுக்கு கழகத்தின் செயற்பாடுகளை மேலும் வலுச் சேர்க்கும் வகையில் ஆளுநரால் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இன்றைய நிகழ்வில் பொது மக்களின் சேவை கருதி பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்ட போதிலும் சுகாதார நலன் திட்டம்,சமூக நலன் திட்டங்கள் கழகம் சார்பாக மாவட்டமட்ட ரீதியில் பல்வேறு சேவைகளை தொடர முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆளுநர் க.லோகேந்திரன் தமது உரையின் போது தாம் இப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டமை தொடர்பான அனுபவங்கள் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக உரையாற்றினார்.

ஒத்துழைப்பு வழங்கிய கழகங்கள் கழக உறுப்பினர்களுக்கும் தமது நன்றியை தெரிவித்தார்.மாவட்டம் கடந்து பல்வேறுபட்ட புதிய செயல் திட்டங்களை எதிர் காலத்தில் மேற்கொள்ளவுள்ளதால் சகல கழகங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.அத்துடன் புதிதாக இளம் அங்கத்தவர்களை கழகத்தில் இணைத்துக் கொண்டு பலமாக செயற்படுவோம் என அவர் இதன்போது கேட்டுக் கொண்டார்.

அத்துடன் இரவு பகலாக தன்னுடன் தோழமையுடன் செயற்பட்டு தமது வெற்றிக்கு பங்களித்து ஆலோசனை மற்றும் வழிகாட்டியாக செயற்பட்டவரான வாழைச்சேனை லயன்ஸ் கழகத்தின் முன்னாள் தலைவர் அமரர் லயன் பா.நிரோசன் அவர்கள் நினைவு கூரப்பட்டதுடன் அவருக்கான நினைவு சின்னத்தை வாழைச்சேனை லயன்ஸ் கழக தலைவர் ச.கார்த்தீபனிடம் வழங்கி வைத்தார்.குறித்த நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் லயனஸ் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.