முள்ளாமுனையில் உள்ள நெற் கொள்வனவு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

விவசாய அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இணைப்பாளர் கிறிஸ்ணகோபால் திலகநாதன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மகளீர் அணி தலைவி வணிதா செல்லப்பெருமாள் உள்ளிட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து சிறுபோக நெற் கொள்வனவினை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

அதே போன்று திங்கட்கிழமையில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் நெற் கொள்வனவானது நெற் கொள்வனவு சபையினால் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையின் அடிப்படையில் சம்பா 120 ரூபாவும், கீரி சம்பா 132 ரூபாவும், நாட்டரிசி 120 ரூபாவிற்குமாக கொள்வனவு செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.