ருத்திரன்
வாழைச்சேனை பரி.யோவான் ஆலயத்தின் 100 வது ஆண்டு விழா நிகழ்வுகள் யாவும் ஆலய குரு முதல்வர் அருட் பணி பி.தயாழன் தலைமையில் சர்வமத குருமார்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய நிகழ்வில் முதல் நிகழ்வாக நூற்றாண்டை நினைவுபடுத்தும் முகமாக நற் செய்தி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இவ் ஊர்வலமானது வாழைச்சேனை பிரதான சந்தைப் பகுதியில் இருந்து கல்குடா வீதி வழியாக வந்து ஆலயத்தினை வந்தடைந்தது.கொழும்பு மறைமாவட்ட பேராயர் அதி வணக்கத்திற்குரிய துஸந்த ரொற்றரிக்கோ அவர்களும் குரு முதல்வர்,திருப்பணியாளர்கள் மற்றும் திருச்சபை மக்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து நூற்றாண்டு விழா வழிபாடு ஆரம்பமானது.இதனை பேராயர் அவர்கள் வழிநடாத்தினார்.அதன் பின்னர் நூற்றாண்டு விழா நூல் வெளியீடு மற்றும் மர நடுகை நிகழ்வும் நடைபெற்றது.
மேற்குறித்த நிகழ்வுகளில் சர்வமத தலைவர்களும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.வுhழைச்சேனை பரி.யோவான் ஆலயமானது 1925 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ் ஆலயமானது வழிபாட்டுடன் கூடிய பல்வேறு சமூக நலன் சார்ந்த பணிகளையும் பிரதேசத்தில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


