போராட்டத்தில் குழப்பிய திருக்கோவில் பிரதேச சபை தவிசாளரின் செயலாளர்

கஜானா சந்திரபோஸ் )

திருக்கோவில் தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக இன்று (16)அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம், தாயகச் செயலணியினர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளரின் செயலாளரினால் அத்துமீறிய குழப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு சர்வதேச மேற்பார்வையுடன் நீதி விசாரணையை வலியுறுத்தியும் உகந்தை முருகன் ஆலய வளாகங்களில் வைக்கப்பட்டிருக்கின்ற புத்தர் சிலைகளை அகற்ற வேண்டும், மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல்தர விவகாரம்,வட்டமடு மேய்ச்சல்தரை, பலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களுக்கான நீதி யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான நீதி, அரசியல் கைதிகள் விடுதலை,பயங்கரவா தடுப்புச் சட்டத்தை நீக்குதல் சட்டவிரோத காணி அபகரிப்புகள் போன்ற பல விடயங்களை முன்னிறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபை தப்பிசாளரின் செயலாளர் போராட்டத்தை குழப்பியதோடு போராட்டத்தில் கலந்து கொண்ட செயற்பாட்டாளர்கள்,தாய்மார்கள், மற்றும் காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் ஆகியோரோடு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதோடு அவர்களைத் தாக்க முற்பட்டு எச்சரித்ததோடு போராட்டத்தையும் குழப்பினர்.

காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க அலுவலக கட்டத்தில் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க அலுவலகமாகஇந்த கட்டிடம் இயங்க முடியாது என நோட்டிஸ் ஓட்டப்பட்டதும் ஏற்கனவே திருக்கோவில் பிரதேச சபை தவிசாளரின் கட்டளையில் ஓட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.