Tag: டக்ளஸ் தேவானந்தா

அதிகாரப்பகிர்விற்கான  புதிய அரசியல் யாப்பு  எந்தளவிற்கு சாத்தியம்  என்பதை  எவராலும்  கூற முடியாதுள்ளது –

இன்று இந்த அரசு முகங்கொடுத்துள்ள தொடர் பிரச்சினைகள் குறித்து நாம் நன்றாக அறிவோம். பொருளாதாரப்பிரச்சினை என்பது இன்னும் எத்தனைக் காலத்திற்கு நெருக்கடி நிலையில் தொடருமோ தெரியாது. எந்தத் துறையில்பிரச்சினை இல்லை எனக் கூற இயலாத வகையில், எல்லாத்துறைகளும் சார்ந்து பிரச்சினைகளுக்கு மேல்பிரச்சினைகளாகவே தொடரும் நிலையில் இந்த நாடு இருந்து வருகின்றது. இந்த நிலையில் அதிகாரப் பகிர்விற்கானபுதிய அரசியல் யாப்பு எந்தளவிற்கு சாத்தியம் என்பதை எவராலும் கூற முடியாதுள்ளது. என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிதுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கொள்கை விளக்க உரை பற்றிய சபைஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் - வெறுமனே அரசிலுக்காக இந்த வருட தைப் பொங்கலைக் கொண்டாடிக் கொண்டு, அடுத்த தைப் பொங்களில், இந்தவருட சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டு, அடுத்த சித்திரைப் புத்தாண்டில், இந்த வருட தீபாவளியைக்கொண்டாடிக் கொண்டு, அடுத்த வருட தீபாவளியில் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்றோ, இந்தவருடத்திற்குள் அரசியல் தீர்வு கிடைக்காவிட்டால், பயங்கர விளைவு ஏற்படும் என்றோ, சர்வதேசம் பார்த்துக்கொள்ளும் என்றோ எமது மக்களை ஏமாற்றிக் கொண்டு காலங்கடத்த முடியாது. அதிகாரப் பகிவு தொடர்பில் புதியதொரு அரசியல் யாப்பினை வகுத்துக் கொண்டு, மக்கள் அபிப்பிராயவாக்கெடுப்புக்குப் போனால், விளைவு என்னவாகும் என்பது குறித்து யதார்தபூர்வமாக சிந்திக்கின்றவர்கள்நன்கறிவார்கள். அதிகாரப் பகிர்வு குறித்த நல்லெண்ண கருத்துக்களை இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் சுமுகமாகக்கொண்டு செல்வதில் எந்தத் தரப்பினரும் இதுவரையில் வலுவான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றே தெரியவருகின்றது. எனவே, தென் பகுதி மக்களில் பெரும்பாலானவர்களை கடந்த கால கசப்புணர்வுகளிலிருந்தும்,சந்தேகங்களிலிருந்தும் மீட்க முடியாதுள்ள நிலையே தொடர்கின்றது. இந்த நிலைப்பாட்டினை மேலும் உரம் போட்டுவளர்க்கின்ற கைங்கரியங்களை பேரினவாத இனவாத சக்திகள் மிகவும் திட்டமிட்ட வகையில் மேற்கொண்டுவருகின்றன. இதற்கு தேவையான சூழலை தமிழ்த் தரப்பு சுயலாப அரசியல்வாதிகள் சிலரும் வலிந்த உருவாக்கிவருகின்றனர் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உழைப்பவர் தினத்தில் உரிமைகள் பெற்றிட உறுதி கொள்வோம்! …

உழைக்கும் மக்கள் உரிமைக்காக எழுச்சி கொண்ட உலகத்தொழிலாளர் தினத்தில் சகல உரிமைகளும் பெற்றிட நாம் உறுதி கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயககட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள மேதின செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த செய்தியில்,... நாம் எமது தேச விடுதலைக்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் எழுச்சி கொண்ட ஓர் தேசிய இனம். நீதியான எமது ஆரம்பகால உரிமைப்போராட்டத்திற்காக ஒரு தேச விடுதலை இயக்கத்தையே நாம் வழிநடத்தி சென்றவர்கள். நாம் மக்களுக்காக இரத்தம் சிந்தியவர்கள். மாபெரும் அர்ப்பணங்களை ஆற்றியவர்கள். தேசத்திற்காக தியாகங்களை ஏற்றவர்கள். ஆனாலும், எமது உரிமைப்போராட்டம் அழிவு யுத்தமாக மாறிய ஆபத்தை உணர்ந்து,.. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் எமது மக்களின் உரிமையை வெல்லும் பாதையை தீர்க்கதரிசனமாக மாற்றிக்கொண்டவர்கள். அழிவு யுத்தம் ஒழிந்து இன்று ஒன்பது ஆண்டுகள் கடந்து போன நிலையிலும்,... நாம் எதற்காக போராடப்புறப்பட்டோமோ அதற்கான நியாங்களுக்கு இன்னும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. எம்மிடம் இன்று இருப்பது எமது மக்களின் உரிமைகளை வெல்வதற்கான மனவுறுதியும் ஆத்ம பலமும் மட்டுமே. இவைகள் மட்டும் இருந்தால் போதாது. மக்களின் ஆணையும் எமக்கு கிடைத்தால் மட்டுமே எமது மக்களின் உரிமைகளை நாம் வென்றெடுக்க முடியும். இது வரை மக்களின் ஆணையை பெற்றவர்கள் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதில் தவறிழைத்தே வந்துள்ளார்கள். தேசியம், சுயநிர்ணய உரிமை,. தன்னாட்சி,.. என்பன வெறுமனே பேசிக்கொண்டிருப்பதற்கான விடயமல்ல. வெறும் தேர்தல் கோசங்களும் அல்ல. இவைகள் அடைந்தே தீர வேண்டிய எமது மக்களின் உரிமை. வெற்றுக்கோசங்களிலும், தேர்தல் வாக்குறுதிகளிலும் வெறுமனே எமது மக்கள் மயங்கி கிடக்கும் நிலை இன்று மாற்றம் கண்டு வருகிறது. எமது மக்கள் முழுமையாக விழித்தெழும் காலம் வெகு தூரம் இல்லை. அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வு, அபிவிருத்தி,. அரசியலுரிமை,. அரசியல் கைதிகளின் விடுதலை,. எஞ்சிய நிலங்கள் மீட்பு, காணாமல் போனோரின் உறவுகளின் துயர் துடைப்பு, எமது சொந்த நிலத்தில் உழைக்கும் மக்களின் சுதந்திர உரிமை,... இவைகளை வென்றெடுக்க மக்கள் எமக்கு வழங்கும் ஆணைக்கு நாம் காத்திருப்போம். அதற்காக உறுதியுடன் உழைப்போம். இவ்வாறு தனது மேதின செய்தியில் தெரிவித்திருக்கும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது மக்களின் சகல உரிமைகளையும் வென்றெடுக்க சக தமிழ் கட்சிகளையும். பொது அமைப்புகளையும் மற்றும் தொழிற்சங்கங்களையும் முரண்பாடுகளுக்கு அப்பால் ஓரணியில் திரண்டு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

சிறுமி சங்கீதாவின்; கண்ணீருக்கு மனிதாபிமான நீதி வேண்டும்

நாடாளுமன்றில் எம்.பி டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!   மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த அரசியல் கைதியான சுதாகரனின் 10 வயது பெண் குழந்தை, தாயை  இழந்த நிலையில், செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வண்டியில் ஏறிய...

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இயக்க உறுப்பினர்கள் மருத்துவச் சான்றிதழ் பெறுவது தொடர்பில் இலகுவான ஏற்பாடுகள் வேண்டும்

புனர்வாழ்வு அதிகார சபையினால் யுத்த காலகட்டத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற நட்ட ஈடுகளை முன்னாள் இயக்க உறுப்பினர்கள் பெற மருத்துவச் சான்றிதழ் தொடர்பில் இலகுவான மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியுமா என சிறைச்சாலைகள்...

தீவிரமும், அதிதீவிரமும் எமது மக்களை அவலங்களுக்குள் தள்ளிவிடும்- டக்ளஸ் தேவானந்தா

கேள்வி:- நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் ஈ.பி.டி.பி யின் வெற்றியை எவ்வாறு பார்க்கிறீர்கள்? பதில் :- நடந்துமுடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈ.பி.டி.பி க்கு கூடுதல் உறுப்பினர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதையும், வாக்குவங்கி அதிகரித்திருப்பதையும் கருத்திற்கொண்டு...

இளைஞர்களின் எழுச்சி மாகாண ஆட்சியாளர்களுக்கும் பாடமாக அமைய வேண்டும்!

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புகளில் மத்திய அரசைப் போன்றே, மாகாண அரசினாலும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர். இதற்கெதிராக எமது இளைஞர்கள் - யுவதிகள் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்த முயற்சிகள் மற்றும்...

யுத்தத்தை எதிர்கொண்ட மக்களை உளவியல் தாக்கம் தற்கொலைக்குத் தள்ளுகின்றது

நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி. கேள்வி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வருடத்திற்கு 500பேருக்கும் அதிகமானோர் தற்கொலைக்கு முயற்சிப்பதாக தெரியவருகின்றது. இவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி, இறந்து வருவதாகவும், யுத்தத்தின் பின்னரே தற்கொலைக்கு முயல்வோரின் எண்ணிக்கை...

படைகளின் தேவைகளுக்காக யாழ் கோட்டையைப் பயன்படுத்தக்கூடாது!

தற்போது யாழ் மாவட்டத்தில் பொது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களில் நிலை கொண்டுள்ள படையினரை, தேசியப் பாதுகாப்பின் தேவை கருதி, அம் மாவட்டத்தின் சனத் தொகைக்கும், இன விகிதாரத்திற்கேற்பவும் பொருளாதார ரீதியில் பெறுமதியற்றதான...

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நியாயமான அணுகுமுறைகள் தேவை!

தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், அக் கைதிகள் விடுவிக்கப்படுவது துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடாகும் என்றும் நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம் என்று...

யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவகூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானிக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி கோரிக்கை இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தை  விட்டுக் கொடுக்கவோ, இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற...

உயிர் நீத்தோரை மட்டுமன்றி,உயிர்வாழப் போராடுபவர்களையும் நினைத்துப்பார்த்துஉதவிட முன்வர வேண்டும்!

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு! எதிர்வரும் 18ஆம் திகதி உயிர்நீத்த எமது உறவினர்களின் நினைவேந்தல் நிகழ்வோடு நின்றுவிடாமல், யுத்தம் காரணமாகப் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு, அப் பாதிப்புகளிலிருந்து இன்னமும் மீள முடியாதிருக்கும் எமது...

நாட்டில் நீதித்துறை கேள்விக்குட்படுத்தப்படுவது ஆரோக்கியமான நிலையல்ல!

நாட்டில் நீதித்துறையானது எல்லோருக்கும் சமம் என்ற வகையில் நடைமுறைப்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,...

உணவு உற்பத்திக்கும் மக்களது தேவைகளுக்குமிடையிலான சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும்!

நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!  நாட்டில் வளர்ச்சியடைந்துவருகின்ற மக்களது தேவைகளுக்கு ஏற்ப உணவு உற்பத்தி தொடர்பில் மிக அதிக அக்கறை செலுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (03)...